இலங்கை செய்தி

கேக் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும்  கேக்களை தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அவை பழுதடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்வரும் புத்தாண்டுக்கு இந்த முட்டைகளை பயன்படுத்தி கேக் தயாரிக்க வேண்டாம் என்று வெதுப்பக உரிமையாளர்களிடம் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இறக்குமதி மூலம் சுங்கம் ஏற்றுமதி – இறக்குமதி சட்டத்தை மீறியுள்ளது.

எனவே பொது சுகாதார ஆய்வாளர்கள் துறைமுகத்திற்குச் சென்று முட்டைகளின் நிலையை பரீட்சிக்கவேண்டும் என்றும் அசேல சம்பத் கோரியுள்ளார்

 

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை