ஐரோப்பா

பிரான்ஸில் கலவரத்திற்கு நடுவே சான்ட்விச்-ஐ ருசித்து மகிழ்ந்த வாலிபர்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் புறநகர் பகுதியை சேர்ந்த கருப்பின சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளது.

இந்த நிலையில், பிரான்சின் முக்கிய நகரங்களில் வன்முறை பரவியது. கடந்த 5 நாட்களாக போராட்டக்காரர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலை தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் வன்முறைக்கு நடுவே ஒரு வாலிபர் ‘சான்ட்விச்’-ஐ ருசித்து சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது.

அதில், பொது மக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர்.

அப்போது எதை பற்றியும் கவலைபடாமல் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்து ‘சான்ட்விச்’-ஐ ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது வைரலாகியுள்ளது

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்