இலங்கை

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்

ஒரு கிலோவிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மாத்தறை கல்ப என்வருடன் தொடர்புடைய இந்நாட்டு போதைப்பொருள் வர்த்தகத்திற்கு தலைமை தாங்கும் குடு தனு என்ற பெண்ணெ கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொடை குடா புத்கமுவ பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த பெண் கைதானார்.

01 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு, 12,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்