உலகம் செய்தி

62 நாட்களுக்குள் லெபனானில் 2,696 பேர் பலி!

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 2026 மார்ச் 2 முதல் இதுவரையில் லெபனானில் 2,696 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 8,264 பேர் காயமடைந்துள்ளனர்.

லெபனான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல், லெபனானுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திவருகின்றது.

குறிப்பாக, தெற்கு லெபனானில் இஸ்ரேல் உக்கிர தாக்குதலை நடத்திவருகின்றது. லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அமைதி பேச்சுக்காக ஈரானில் முன்வைத்துள்ள 14 பரிந்துரைகளில், லெபனான்மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பது பிரதான விடயமாகும்.

அதேவேளை, காசாவிலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திவருகின்றது. அங்கும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி