ஐரோப்பா

பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை – குளிக்கும் இடங்களில் கழிவு நீர் வெளியேற்றம்

ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் வெப்ப அலைக்கு மத்தியில் பிரத்தானியாவில் நீர் விநியோகிக்கும் சில நிறுவனங்கள் கழிவு நீரை மக்கள் குளிக்க பயன்படுத்தும் நீர் நிரம்பிய இடங்களில் வெளியேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் சில  நீர்நிலைகளில் 2,856 மணிநேர கழிவுநீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 99 மணிநேர கழிவுநீர், குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளைப் பாதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்ச கழிவுநீர் வெளியேற்றத்திற்கு தேம்ஸ் வாட்டர் நிறுவனமே காரணமாக இருந்ததாகவும், அந்நிறுவனம் 377 மணிநேரம் கழிவுகளை வெளியேற்றியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சதர்ன் வாட்டர்  ( Southern Water) நிறுவனம் குளிக்கும் நீர்நிலைகளில் அதிகபட்சமாக 49 மணிநேரம் கழிவுகளை வெளியேற்றியுள்ளது.

ஜூன் 22 முதல் 26 வரை நிகழ்ந்த இந்தக் கழிவுநீர் வெளியேற்றங்களுக்கு, பழமையான குழாய் வலையமைப்பு செயலிழந்ததே காரணம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 46 இடங்களுக்கு கழிவுநீர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், 39 வெவ்வேறு இடங்களில் இருந்து 60 பேர் நோய்வாய்ப்பட்டதாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்