இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

போர் பதற்றம் தீவிரம் – பாதாள அறையில் தஞ்சமடைந்த ஈரான் மதத் தலைவர்

In this photo released by the official website of the office of the Iranian supreme leader, Supreme Leader Ayatollah Ali Khamenei speaks during a memorial in Tehran, Iran, Tuesday, May 20, 2025 for late President Ebrahim Raisi, who died in a helicopter crash last year. (Office of the Iranian Supreme Leader via AP)

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி, தலைநகர் தெஹ்ரானின் வடகிழக்கில் லாவிஜான் பகுதியில் உள்ள பாதாள அறையில் குடும்பத்துடன் தஞ்சமடைந்து உள்ளார்.

கடந்த 13-ம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தினோம். அன்றைய தினமே அயத்துல்லா அலி கொமேனி மீதும் தாக்குதல் நடத்தியிருக்க முடியும். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறோம் என இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஈரானின் அணு ஆயுத திட்டத்தை அவர் முழுமையாக கைவிட வேண்டும். இல்லையெனில் அணு ஆயுத திட்டத்துக்கான கட்டமைப்புகளை இஸ்ரேல் முழுமையாக அழிக்கும். அயத்துல்லா அலி கொமேனி பாதாள அறையில் பதுங்கியிருந்தாலும் எங்களால் தாக்குதல் நடத்த முடியும். இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியதாவது: கடந்த 1979-ம் ஆண்டில் ஈரானில் புரட்சி ஏற்பட்டது. அப்போது மன்னராட்சி அகற்றப்பட்டது. இதன்பிறகு ஷியா பிரிவு மதத் தலைவர்களே ஈரானை ஆட்சி செய்து வருகின்றனர். அந்த நாட்டின் அதிபர் மசூத் பெசெஷ்கியன், பெயரளவுக்கு மட்டுமே அதிபராக பதவி வகிக்கிறார்.

தற்போதைய ஷியா மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியே ஈரானை திரைமறைவில் ஆட்சி செய்து வருகிறார். அவரை அகற்றிவிட்டு, ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இஸ்ரேல் வியூகம் வகுத்து உள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், ஏமனை சேர்ந்த ஹவுத்தி தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்த 3 தீவிரவாத அமைப்புகளும் வலுவிழந்துவிடும். எனவே ஈரானுக்கு எதிரான போரை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. இவ்வாறு சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்