உலகம்

காங்கோ மக்களை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று – அவசரநிலை அறிவிப்பு!

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் நோய் பரவியதன் காரணமாக, உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் மூன்று சுகாதார மண்டலங்களில், நேற்று (16)    எட்டு நோய்த்தொற்றுகள், மற்றும் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், 246 பேர் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே அவசர நிலையை அறிவிக்க உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை உகாண்டாவின் கம்பாலாவில், மே 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் காங்கோ குடியரசிலிருந்து வந்த இரண்டு உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் கம்பாலாவில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

மக்கள் நடமாட்டம், வர்த்தகம் மற்றும் பயணத் தொடர்புகள், மற்றும் தொடர்ச்சியான நோய்ப்பரவல் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக, காங்கோ குடியரசுடன் தரை எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடுகளில் இந்த நோய் மேலும் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!