அமெரிக்க துணை ஜனாதிபதியின் பாகிஸ்தான் பயணம் ரத்து!
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸின் JD Vance பாகிஸ்தான் பயணம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஈரான் அதிகாரிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக அவர் இன்று இஸ்லாமாபாத் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.
எனினும், அமெரிக்கா-ஈரான் இடையிலான போர்நிறுத்தத்தை காலவரையறையின்றி நீடிப்பதற்கு ட்ரம்ப் சம்மதித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எதிர்கால சந்திப்பு குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





