விளையாட்டு

டெல்லியை வீழ்த்தியது ஹைதராபாத்!

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 31 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Sunrisers Hyderabad அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி Delhi Capitals
அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஹைதராபாத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆரம்பம் முதலே டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். வெறும் 47 பந்துகளில் சதம் கடந்த அவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 68 பந்துகளில் 135 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்களைப் பெற்றது.

243 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி , 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

ஹைதராபாத் பந்துவீச்சாளர் ஈஷான் மலிங்கா தனது துல்லியமான யார்க்கர்களால் டெல்லி வீரர்களை நிலைகுலையச் செய்தார். அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றியை எளிதாக்கினார்.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!