ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

பிரித்தானியாவை தாக்கும் கோரெட்டி (Goretti) புயல் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும். ஸ்கில்லி (Scilly)  மற்றும் கார்ன்வால் (Cornwall) தீவுகள் அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சரவை அலுவலகம் முதல் எச்சரிக்கையை பிற்பகல் 3 மணியளவில் ஸ்கில்லி தீவுகளுக்கு அனுப்பியது, இரண்டாவது எச்சரிக்கையை மாலை 5 மணிக்கு கார்ன்வாலுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த புயலின்போது மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும், மின்துண்டிப்பு ஏற்படும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆகவே அவசர எச்சரிக்கைகள் தொலைபேசி வழியாக அனுப்படும் என்றும், 05 இலட்சம் மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்