ஐரோப்பா

லண்டனில் சுரங்க ரயில் ஓட்டுநர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஆரம்பம்!

RMT தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுரங்க ரயில் ஓட்டுநர்கள், இன்று நண்பகல் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்திற்கு எதிராக அவர்கள் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தொழிற்சங்கத்தின் அறிவிப்பின்படி முதல் நாள் வேலைநிறுத்தம் இன்று நண்பகல் லண்டன் அண்டர்கிரவுண்டில் ஆரம்பமாகியது.

அதேபோல் அடுத்த வேலைநிறுத்த போராட்டம் வரும் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

வேலைநிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான வழித்தடங்களில் தாமதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டமானது தலைநகரின் பொது போக்குவரத்தை நான்கு நாள் பாதிக்கும் வகையில் முன்னெடுகக்கப்பட்டுள்ளதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!