உலகம்

இஸ்ரேல் ஊழியர்கள் ஹமாஸுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றச்சாட்டு ;ஆதாரம் கேட்கும் ஐ.நா

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்புப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அது தெரிவித்தது.அந்த ஆதாரங்களைத் தம்மிடம் காட்டும்படி அப்பிரிவின் தலைவர் டாம் ஃபிளட்சர் கூறியுள்ளார்.

ஃபிளட்சரும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்புப் பிரிவும் நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை என்று ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் ஐநாவுக்கான இஸ்‌ரேலியத் தூதர் டேனி டனோன் தெரிவித்தார்.

எனவே, அப்பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர்களுக்கான விசா ஒரு மாதத்துக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் டனோன் கூறினார்.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்