அமைதி முயற்சியை சீர்குலைக்க இஸ்ரேலுக்கு இடமளிக்க கூடாது – துருக்கி ஜனாதிபதி
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உடன்படிக்கையை சீர்குலைக்க இஸ்ரேலுக்கு அனுமதிக்கக் கூடாது என்று துருக்கி ஜனாதிபதி Tayyip Erdogan வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் அமைதிக்கான முயற்சிகள் பிராந்திய நாடுகளின் ஆதரவின்றி வெற்றியடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்தான்புல்லில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புடன் (Shehbaz Sharif) இணைந்து உரையாற்றிய Erdogan, “பிராந்திய நாடுகளின் விருப்பத்திலிருந்தும் பங்களிப்பிலிருந்தும் பலத்தைப் பெறாத எந்தவொரு தீர்வும் நிலையானதாக இருக்க முடியாது” என்று கூறினார்.
“அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தத்தை சீர்குலைக்க இஸ்ரேலிய நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
தற்போது போருக்கு அடிமையாகியுள்ள இஸ்ரேலிய அரசாங்கம், எங்களது பிராந்தியத்தை மீண்டும் வெடிமருந்து மற்றும் இரத்த வாடையில் மூழ்கடிக்க அனுமதிக்கக் கூடாது,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்க முயல்வதாக துருக்கி தலைவர் உர்கான் பலமுறை குற்றம் சாட்டியுள்ளதுடன், காசா, லெபனான் மற்றும் சிரியா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களையும் அவர் தொடர்ந்து கண்டித்து வருகிறார்.




