இந்தியா செய்தி

உத்தரகாண்டில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து – 60 பேர் காயம்

Two trains collide in Uttarakhand, 60 injured

உத்தரகாண்ட்(Uttarakhand) மாநிலம் சமோலி(Chamoli) மாவட்டத்தில் உள்ள விஷ்ணுகாட்-பிபல்கோட்டி(Vishnugad-Pipalkoti) நீர் மின்சார திட்ட சுரங்கப்பாதையில் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற லோகோ(loco) ரயில், சரக்கு ரயிலுடன் மோதியதில் சுமார் 60 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நடந்தபோது ரயிலில் மொத்தம் 109 பேர் இருந்ததாகவும், அவர்களில் 60 பேர் காயமடைந்ததாகவும் சாமோலி மாவட்ட நீதிபதி கௌரவ் குமார்(Gaurav Kumar) குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அனைத்து மக்களும் மீட்கப்பட்டதாகவும் காயமடைந்த அனைவரின் நிலையும் சீராக இருப்பதாகவும் கௌரவ் குமார் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் கூற்றுப்படி தொழிலாளர்கள், அதிகாரிகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான பொருட்களை கொண்டு செல்வதற்கு லோகோ ரயில்கள் சுரங்கப்பாதைகளுக்குள் பயன்படுத்தப்படுகின்றன.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி