துருக்கி காட்டுத்தீ – நபர் ஒருவர் மரணம்
துருக்கியின் அன்டால்யா மாகாணத்தில் காட்டுத்தீ ஏற்பட்டபோது நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தீயினால் உருவான புகையைச் சுவாசித்ததால் அந்த நபர் உயிரிழந்ததாக அக்ஸு (Aksu) மாவட்ட மேயர் ஈசா யில்டிரிம் Isa Yildirim எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேநேரம் அன்டால்யாவின் கும்லுகா (Kumluca) மற்றும் மெர்சினின் போஸ்யாசி (Bozyazi) மாவட்டங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவற்றை முழுமையாக அணைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு முயற்சிகளில் உள்ளூர் மக்களும் […]



