ட்ரம்பின் நடவடிக்கை – அமெரிக்காவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்வு!
அமெரிக்காவில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆட்டோமொபைல் அசோசியேஷன் (AAA) தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் பிப்ரவரி 28 அன்று தொடங்குவதற்கு முன்பு 3 டொலருக்கும் குறைவாக இருந்த பெற்றோல் விலை தற்போது 4.30 டொலரை எட்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 4 கோடி மக்கள் வசிக்கும் கலிபோர்னியாவில், நேற்றைய தினம் ஒரு கேலன் பெட்ரோல் விலை 6 டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது.
“ஹோர்முஸ் ஜலசந்தி எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலருக்கும் மேல் உயர்ந்துள்ளதால், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் உயர்வு, பணவீக்கத்தையும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையையும் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




