உலகம்

ஆப்கானிஸ்தானின் விமான தளத்தை அமெரிக்காவுக்கு வழங்குமாறு கோரி மிரட்டிய டிரம்ப்

சீனாவின் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தானின் பஹ்ராம் விமானப்படை தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர டிரம்ப் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் அமெரிக்க படைகளை குவிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே தாலிபான்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

“பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் விரைவில் திருப்பித் தர வேண்டும். அந்த விமான தளத்தை அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும்” என டிரம்ப் குறிப்பிட்டள்ளார்.

இந்நிலையில் டிரம்ப் மிரட்டலை தாலிபான் அரசு நிராகரித்துள்ளது.

சிலர் அரசியல் ஒப்பந்தங்கள் மூலம் தளத்தை மீண்டும் பெற பேச்சுவார்த்தை நடந்த விரும்புகின்றனர் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் எந்த ஒப்பந்தத்தின் மூலமும் ஆப்கானிஸ்தானின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்ட ஆப்கானிஸ்தான் அரசு, “நாட்டின் சுதந்திரம் மற்றும் நிலையான ஒருமைப்பாடு மிக முக்கியமானவை” என தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்