உலகம் செய்தி

நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா?

President Donald Trump speaks during a meeting with Irish Prime Minister Leo Varadkar in the Oval Office of the White House, Thursday, March 12, 2020, in Washington. (AP Photo/Evan Vucci)

நேட்டோ (NATO) அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தீவிரமாக ஆலோசித்துவருகின்றார் என தெரியவருகின்றது.

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் போதிய ஆதரவை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டும் ட்ரம்ப், அந்த அமைப்பை ஒரு வலிமையற்ற கட்டமைப்பு என்று விமர்சித்துவருகின்றார்.

குறிப்பாக, ஈரான் மற்றும் உக்ரைன் விவகாரங்களில் அமெரிக்காவிற்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா மற்ற நாடுகளுக்குத் தானாகவே முன்வந்து உதவிய போதிலும், நேட்டோ கூட்டணி நாடுகள் அதற்குப் பிரதிபலனாகச் செயல்படவில்லை என்பது அவரது முக்கிய வாதமாகும்.

இந்த விரிசல் காரணமாக, சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இருந்து அமெரிக்கா விலகக்கூடும் என்ற அச்சுறுத்தலை டிரம்ப் விடுத்துள்ளார். இது உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி