இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

மருந்து ஏற்றுமதிப் பொருள்கள் மீது பெரிய அளவில் வரிவிதிக்க தயாராகும் டிரம்ப்

நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் மருந்து ஏற்றுமதிப் பொருள்கள் மீது பெரிய அளவில் வரிவிதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அப்படிச் செய்வதால் மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவுக்குச் செயல்பாடுகளை மாற்றும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து நிறுவனங்களுக்குத் தனி வரித்திட்டம் உள்ளது. வரித்திட்டத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஐரோப்பாவின் மருந்து நிறுவனங்கள் அச்சம் தெரிவித்தன.

புதிய வரிகளால் மருந்து நிறுவனங்கள் இனி ஐரோப்பாவைத் தவிர்த்து, அமெரிக்காவில் முதலீடு செய்ய நேரிடும் என்று ஐரோப்பிய ஆணையத்துடன் நடத்தப்பட்ட சந்திப்பில் நிறுவனங்கள் எச்சரித்தன.

ஐரோப்பாவின் மருந்துத் தொழில்துறை அதன் கட்டுப்பாடுகளை மாற்றிக்கொள்ளவேண்டும்; ஐரோப்பாவின் அறிவார்ந்த சொத்து விதிகளை வலுவாக்கவேண்டும் என்று சந்திப்பில் அறிவுறுத்தப்பட்டது.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்