இலங்கை செய்தி

சிறைச்சாலை மோதல் – விசாரணைக்கு மூவரடங்கிய விசேட குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (07) பிற்பகல் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவின் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க, ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த விசாரணைக்குழுவின் செயலாளர்/அழைப்பாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கே.எல்.டீ அசேல நியமிக்கப்பட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை