லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை தாக்கப்போவதாக மிரட்டல்!
லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை தாக்கப்போவதாக கிடைக்கப்பெற்ற செய்தி தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்களைக் கொண்டு தூதரகத்தைத் தாக்கப்போவதாக இணையம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தூதரகத்திற்கு அருகிலுள்ள கென்சிங்டன் கார்டன்ஸ் (Kensington Gardens) பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் வீசப்பட்ட பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததோடு, அந்தக் காணொளியின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யவும் முயன்று வருகின்றனர்.
இதற்கிடையே இஸ்ரேலிய தூதரகம் தாக்கப்படவில்லை என்றும், அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் பெருநகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.





