இலங்கை

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் நிகழ்வு முன்னெடுப்பு!

திருகோணமலை சிவன் கோவிலடியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவுகூரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உருப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் திருகோணமலை வாழ் மக்கள் ஒன்றிணைந்து சுடர் ஏற்றி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வு இன்று (19) திருகோணமலை சிவன்கோயில் முன்றலில் நடைபெற்றது.

நினைவேந்தல் உரிமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தான ஒன்று அதனை மறுத்து மூர்க்கத்தனமாக மேற்கொள்ளப்பட்ட இனவெறித்தாக்குதலானது சமூகங்களுக்கு இடையில் இன விரிசலை ஏற்படுத்த இந்த அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒன்று என செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

மேலும் அரச இராணுவ ஒத்துழைப்புடன் புலனாய்வுத் துறையினராலேயே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே இதனை தாம் பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ், முஸ்லிம்களது உரிமைக்காகவே தியாகி திலிபன் அகிம்சை முறையில் போராடியதாகவும் அது பிற்போக்கில் அரசினால் பிரிவினை வாதமாக மாற்றப்பட்ட நிலையில் தற்போதும் இந்த அரசானது குறித்த பிரிவினை வாத அடக்குமுறைக்கு ஏற்றவாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்