உலகம் செய்தி

அமெரிக்காவில் திறமையான தொழிலாளர்கள் இல்லை – ட்ரம்ப்!

US President accuses Christians of facing threats in Nigeria

அமெரிக்காவில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய திறமையான தொழிலாளர்கள் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சிஎன்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரத்தியேக செய்தி சேவைக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

H1-B விசாக்கள் அமெரிக்க தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்குமா என செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த ட்ரம்ப், நீங்கள் திறமையான தொழிலாளர்களை கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு பதிலளித்த செய்தியாளர் இங்கே திறமையான தொழிலாளர்கள் பலர் இருப்பதாக தெரிவித்தார். அதனை மறுத்த ட்ரம்ப் இல்லை, உங்களிடம் சில திறமைகள் இல்லை, மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என பதிலளித்துள்ளார்.

உதாராணமாக ஜார்ஜியாவில் (Georgia) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளை சுட்டிக்காட்டிய அவர், அங்கு தென்கொரிய தொழிலாளர்கள் பேட்டரி உற்பத்திகளை மேற்கொண்டமை தொடர்பில் சுட்டிக்காட்டினார். அவ்வளவு சிரமமான தொழிலை முன்னெடுக்கக்கூடியவர்கள் தங்கள் வசம் இல்லை என்பதை அவர்  குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி