இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அரசாங்கம்

ஈரானின் பதிலடியில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க முடியாது என்று அமெரிக்க அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் நாட்டின் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவிருந்த இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட்டின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களின் முக்கியத் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த 1ஆம் திகதி இதுவரை இல்லாத வகையில் இஸ்ரேல் மீது 180 சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த ஏவுகணைகளை அமெரிக்காவின் ஆதரவுடன் வழிமறித்து தாக்கியதாக இஸ்ரேலும், 90 சதவிகித ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கியதாக ஈரானும் அறிவித்திருந்தது.

ஈரானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்க வகையில், அந்நாட்டின் எண்ணெய் ஆலைகள், அணுசக்தி தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பை தாக்குவதற்கான திட்டத்தை இஸ்ரேல் வகுத்து வருகின்றது.

இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ஈரானின் பதில் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா உதவாது என்று பைடன் அரசு எச்சரித்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்