வட அமெரிக்கா

கனடாவின் பொருட்கள் அமெரிக்காவுக்கு தேவை இல்லை! பதிலடி கொடுத்த டிரம்ப்

US President Donald Trump speaks with the press, alongside White House Press Secretary Karoline Leavitt (R), on board Air Force One after departing Las Vegas, Nevada, en route to Miami, Florida on January 25, 2025. After visits to disaster sites in North Carolina and California, the Vegas stop is more of a feel-good victory lap, as he lays out his plans to exclude tips from federal taxes — an enormously popular move in a city built on the hospitality industry. (Photo by Mandel NGAN / AFP) (Photo by MANDEL NGAN/AFP via Getty Images)

கனடாவில் உற்பத்தி செய்யப்படும் எந்தப் பொருட்களும் அமெரிக்காவுக்கு தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி பதவியேற்ற குடியரசு கட்சியின் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக அண்மையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்க உற்பத்திகளுக்கு அதிகளவான வரியனை விதித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. இந்த இறக்குமதி பெப்பிரவரி 02 ஆம் திகதியிலிருந்து(நேற்று) அமுல்படுத்தப்படும் என்றும் கனடா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கனடாவின் அறிவிப்பால் ஆத்திரமடைந்துள்ள ட்ரம்ப் ”கனடாவில் உற்பத்தி செய்யப்படும் எந்தப் பொருட்களும் எங்களுக்குத் தேவையில்லை. எங்களிடம் ஆற்றல் உள்ளது. எங்களால் சொந்தமாக உருவாக்க முடியும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”நாட்டு மக்களுக்கு தேவைப் படும் அளவை விட அதிகமான அளவு எங்களிடம் பொருட்கள் உள்ளன. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக உருவாக்குவோம். அதன் மூலம் கனடா மக்களுக்கு மிக குறைந்த வரி மற்றும் இராணுவ பாதுகாப்புகள் ஆகியவற்றை உருவாக்குவோம்” என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

 

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்