உலகம்

உலகளவில் பட்டினிச் சாவை எதிர் நோக்கியுள்ள 29.53 கோடி பேரின் பரிதாப நிலை

உலகளவில் 29.53 கோடி பேர் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

“சா்வதேச உணவுப் பற்றாக்குறை அறிக்கை“ என்று பெயரிடப்பட்டு, அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான உணவு பற்றாக்குறை காரணமாக உலகம் முழுவதும் 29.53 கோடி பேர் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் ஆயுத மோதல்கள், மனிதாபிமான உதவிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டது, பருவநிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 1.37 கோடி பேர் கூடுதலாக உணவு பற்றாக்குறையை எதிா்கொண்டனர்.

காஸா முனை, சூடான், ஹைட்டி, மாலி, தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் மட்டும் 95 சதவீதம் போ் மிக மோசமான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்..

சூடானில் உள்நாட்டு போா் காரணமாக பஞ்சம் அறிவிக்கப்பட்டு, 2.4 கோடி பேர் உணவு இல்லாமல் தவித்துவருகின்றனா்.

காஸாவுக்குள் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருகளை எடுத்துச் செல்லச் செல்ல விடாமல் இஸ்ரேல் ராணுவம் கடந்த மாா்ச் முதல் முற்றுகையிட்டுள்ளது. இதனால் அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, 21 லட்சம் போ் பஞ்ச அபாயத்தில் சிக்கியுள்ளனா்.

மியான்மா், நைஜீரியா, காங்கோ உள்ளிட்ட 19 நாடுகளில் மோதல்களும், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் வறட்சியும் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன.

டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவின் சா்வதேச நிதியுதவி அமைப்பான யுஎஸ்எய்டின் நிதி ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதனால் சூடான், யேமன், ஹைட்டியில் 1.4 கோடி குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்