இந்தியா

மணல் அள்ளும் போது கிளம்பிய புழுதி…ஒருவர் படுகொலை!- வாலிபருக்கு வலைவீச்சு

மணல் அள்ளும் போது கிளம்பிய புழுதியால் ஏற்பட்ட பிரச்சினையில் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கோலாரில் உள்ள ஹெம்மிகேபுராவைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம்(42). இவர் லொரியில் மணல் அள்ளும் வேலை செய்து வந்தார். அவர் வீட்டின் அருகே நிறுத்தப்படும் லொரியில் இருந்த புழுதி பக்கத்து வீடுகளில் படிவதாக புகார் எழுந்தது. இதனால் பஞ்சலிங்கத்தின் நண்பரான சிரஞ்சீவி கண்டித்து வந்துள்ளார்.

நேற்று லொரியை பஞ்சலிங்கம் நிறுத்திய போது, அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது சிரஞ்சீவிக்கும், பஞ்சலிங்கத்திற்கும் வாக்குவாதமாகி தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சிரஞ்சீவி தனது நண்பர்கள் இருவருடன் பஞ்சலிங்கம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால், பஞ்சலிங்கத்தை சிரஞ்சீவி குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பஞ்சலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்த சிரஞ்சீவி மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாளக்கரை பொலிஸார், கொலை செய்யப்பட்ட பஞ்சலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே