இலங்கை செய்தி

“கச்சதீவில் தமிழக வெற்றிக் கழக கொடி”: இலங்கை இளைஞர்கள் செய்த செயல்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்துக்குச் சென்ற இலங்கைப் படகு ஒன்றில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ கொடி பறக்கவிடப்பட்டிருந்தமை அங்கு கூடியிருந்த இந்திய யாத்திரிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவில் திரண்டுள்ளனர்.

இதன்போது, இலங்கையிலிருந்து சிறிய படகு ஒன்றில் கச்சதீவுக்குப் பயணித்த சில இளைஞர்கள், நடிகர் விஜய்யின் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ கொடியை ஏந்தியவாறு பயணித்தனர்.

இலங்கைப் படகில் தமிழக அரசியல் கட்சி ஒன்றின் கொடி பறப்பதைக் கண்ட அங்கிருந்த இந்திய யாத்திரிகர்கள் மற்றும் ஏனைய பக்தர்கள், அதனை மிகுந்த வியப்புடனும் ஆர்வத்துடனும் அவதானித்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!