கச்சத்தீவு திருவிழா கோலாகலமாக ஆரம்பம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, 2026 பெப்ரவரி 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
நேற்று மாலை நடைபெற்ற விசேட வழிபாடுகள் மற்றும் கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான திருவிழா நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்தத் திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வான மகாத் திருவிழா கூட்டுத் திருப்பலி இன்று (28) காலை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
இந்த வருடாந்தப் பெருவிழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படகுகள் மூலமாக கச்சத்தீவை நோக்கி வந்தடைந்த வண்ணம் உள்ளனர்.
கடல் மார்க்கமாகப் பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட ரோந்துப் பணிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஞான பிரசாந்தன்





