உலகம்

ஒப்பந்தம் இன்றி முடிவடைந்த பேச்சுவார்த்தை : ஈரானின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா அமெரிக்கா!

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்வித ஒப்பந்தமும் இன்றி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓமானின் மத்தியஸ்தத்தில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை  நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும்,  எவ்வித ஒப்பந்தமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் அடுத்த சுற்று பேச்சவார்த்தைகள் அடுத்த வாரம் வியன்னாவில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதன்போது அணுசக்தி தகராறைத் தீர்ப்பது மற்றும் சாத்தியமான அமெரிக்க தாக்குதல்களைத் தவிர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தொழில்நுட்ப அளவிலான முன்னேற்றம் தொடர்பில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமன் வெளியுறவு அமைச்சர் சையித் பத்ர் அல்புசைடி (Sayyid Badr Albusaidi) பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாக விவரித்துள்ளார்.

அத்துடன் ஈரான் அமெரிக்கத் தடைகளை நீக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்கா ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தையும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவையும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்