ஐரோப்பா

ஸ்பெயின் காட்டுத்தீ – தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

ஸ்பெயினில் காட்டுத்தீயால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) வலியுறுத்தியுள்ளார்.

12 பேரின் உயிரை பறித்த மோசமான காட்டுத்தீ பரவிய இடமான லாஸ் கல்லார்டோஸ் ( Los Gallardos ) பகுதிக்கு இன்று களவிஜயம் செய்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “காலநிலை மாற்றம் காரணமாக  பாதுகாப்பு அவசரநிலைகள் ‘அதிகரித்து வருவதால்’, ‘இந்தத் தீ விபத்துகள் ஏற்படும்போது நாம் எதிர்வினையாற்றுவது மட்டுமல்லாமல், அவற்றைத் தடுக்கவும் வேண்டும்'” என்று  வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவசரகால சேவைப் பணியாளர்களைச் சந்திப்பதற்காக, பிரதமர் தெற்கில் உள்ள டர்ரே நகராட்சிக்குச் சென்றார்.

அங்கு நகராட்சிகளுக்கு சிறந்த பாதுகாப்பு வழங்குவதையும், இளைஞர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

லாஸ் கல்லார்டோஸ் காட்டுத்தீயில், இதுவரை  13 பேர் உயிரிழந்துள்ளனர், 23 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிட்டத்தட்ட 7,000 ஹெக்டேர் நிலம் எரிந்து சாம்பலாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்