நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்
எல்நினோ தாக்கத்தின் காரணமாக கடும் வெப்பமான வானிலையால் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் எனவும், எனவே நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் 80 நீர்த்தேக்கங்கள், 48 சதவீதம் நிரம்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நீர் இருப்பு அளவைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், கையிருப்பைச் சேமிக்குமாறும், நீர்ப்பாசன இயக்குநர் (நீர் மேலாண்மை) பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குடிநீருக்காக நீர்த்தேக்கங்களைச் சார்ந்துள்ள சமூகங்களுக்கு போதுமான நீர் விநியோகம் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் நீர்ப்பாசன இயக்குநர் மேலும் வலியுறுத்தியள்ளார்.




