ஈரானுடனான போர் – 06 மாதங்களில் கையிருப்பில் இருந்த வெடிமருந்துகளை கரைத்த அமெரிக்கா
ஈரானுடனான போரின் காரணமாக அமெரிக்காவிடம் ஆயுதம், வெடிமருந்து கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமை ஆய்வாளர் நேற்று இந்த விடயத்தை வெளியிட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட இது தொடர்பான அறிக்கையில், பிப்ரவரி 28 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (OEF) நடவடிக்கைக்கு 33.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 22.3 பில்லியன் டொலர்கள் வெடிமருந்துகளுக்காக மட்டும் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “OEF நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிமருந்துச் […]



