விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டம்
வெளிநாட்டு மாணவர்கள், கலாச்சாரப் பரிமாற்றப் பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான விசாக்களின் கால அளவைக் கடுமையாக்க ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய சர்வதேச மாணவர்களுக்கான F விசாக்கள், கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்களில் பங்கேற்கும் பார்வையாளர்களை அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் J விசாக்கள் மற்றும் ஊடக உறுப்பினர்களுக்கான I விசாக்கள் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரை காங்கிரஸிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 60 நாட்களில் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதிமுறையின் […]



