விர்ஜீனியா பல்கலைக்கழக துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சூத்திரதாரி கைது
விர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 05 பேர் காயமடைந்துள்ள நிலையில், தாக்குதல்தாரி 14மணிநேரத்தின் பின் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதான கேம்ரான் ஹாரிஸ் (Camron Harris) என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல்தாரி அலமாரியில் ஒளிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 முதல் 23 வயதுக்குட்பட்ட ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




