பொழுதுபோக்கு

பரப்புரை காரில் மணமக்கள்! விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி

  • April 20, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது காரில் மணமக்களை நேரில் அழைத்து வாழ்த்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அப்போது, அந்த வழியாக வந்த மணமக்கள் இருவரைத் தனது பரப்புரை வாகனத்திற்குள்ளேயே அழைத்து வாழ்த்தியுள்ளார். வழக்கமாகத் தலைவர்கள் தங்களது வாகனத்தின் மேலிருந்தே வாழ்த்துத் தெரிவிக்கும் நிலையில், பாதுகாப்பு வளையங்களையும் கடந்து திருமணப்பரிசாக மணமக்களை அருகில் அழைத்து விஜய் உரையாடியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. […]

பொழுதுபோக்கு

இணையத்தில் கசிந்த ஜன நாயகன்!

  • April 10, 2026
  • 0 Comments

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் 3 மணி நேர முழு படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமாக இணையத்தில் முழு படமும் வெளியான நிலையில், இதனை யார் வெளியிட்டிருப்பார்கள் என்பது குறித்து முறைப்பாடு அளிக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வெளியாகவிருந்த ஜன நாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை மற்றும் தேர்தல் காரணமாக வெளியாவதில் சிக்கல்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா பொழுதுபோக்கு

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தாக்கல்

  • February 27, 2026
  • 0 Comments

தென்னிந்தியாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  விஜய் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது மனைவியின் விவாகரத்து கோரல், வாக்கு வங்கியில் பின்னடைவை ஏற்படுத்துமென தமிழக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புகைப்பட தொகுப்பு

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண செலவு இத்தனை கோடியா?

  • February 27, 2026
  • 0 Comments

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா முறைப்படியும் நடந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமண புகைப்படங்களை நேற்று மாலை விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் வெளியிட்டனர். புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. திருமண விழாவில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகள் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. இருவரது தோற்றமும் ராமர்-சீதாவை நினைவுப்படுத்துகிறது. விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகளை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா […]

இந்தியா செய்தி

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை வழங்கிய விஜய்!

  • October 19, 2025
  • 0 Comments

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த  41 பேரின் குடும்பங்களை விரைவில் சந்திப்பேன் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அத்துடன் முன்னதாக அறிவித்தப்படி 41 குடும்பங்களுக்கும் இழப்பீட்டு தொகையாக 20 இலட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மக்களை சந்திக்க சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாகச் சந்திப்போம். நாம் அறிவித்தபடி குடும்பநல […]

இந்தியா

மும்முரமாகும் தமிழக தேர்தல் களம் – அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கிய விஜய்!

  • October 10, 2025
  • 0 Comments

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 06 மாதங்கள் உள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் சின்னத்தை பெறுவதற்கான  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மாதம் இறுதியில் அல்லது நவம்பர்  மாதத்தின் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பில் விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க. முதலில் முச்சக்கர வண்டிச் சின்னத்தை குறி வைத்திருந்தது. ஆனால் அந்த சின்னம் கேரளாவில் ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே சுயேட்சை பட்டியலில் இடம் பெற்றுள்ள சின்னங்களில் ஒன்றை […]

error: Content is protected !!