விஜய்க்கு புறாவால் வந்த ‘வினை’!
விஜய் அரசியல் களத்துக்கு வந்தது முதலே பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவருகின்றார். தேர்தல் பரப்புரைகளின்போது பல சவால்களை எதிர்கொண்டார். தற்போது தேர்தல் முடிந்த பின்பும் அவருக்கான சிக்கல் ஓயவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது புறாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வண்ணம் பூசப்பட்டு பறக்கவிடப்பட்ட விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருச்சியில் ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பீட்டா இந்தியா அமைப்பு , தவெக தலைவர் தலைவர் […]













