ஐரோப்பா

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா!!

உக்ரைனில்  போரை தொடர முடியாத சூழ்நிலையில் ரஷ்யா இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்குமாறு நிதி அதிகாரிகள் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்யாவின் நிதி அமைச்சகம் கணிசமான நிதி பற்றாக்குறையை  எதிர்பார்க்கிறது.

இந்த ஆண்டு குறைந்தபட்சம் 28 பில்லியன் டொலர் அளவுக்கு நிதி வரம்பு மீறப்படும் என்றும், வரும் ஆண்டுகளிலும் மேலும் செலவு அதிகரிக்கும் என்றும் நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ், (Anton Siluanov) கணித்துள்ளார்.

போர் அல்லாத செலவினங்களில் சுமார் 40.8 பில்லியன் டொலரை முடக்க சிலுவானோவ் முன்மொழிந்துள்ளார். மேலும், ரஷ்யாவின் நிதி கையிருப்பு வரம்பற்றது அல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே நிதி ஒதுக்கீட்டில் ஐந்தில் இரண்டு பங்கு பாதுகாப்பு மற்றும் காவல் துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், ரஷ்யாவின் வெளிப்படையான பொருளாதார வளர்ச்சி ஒரு மாயை என்றும், இந்தப் போர் பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாததாக இருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!