இந்தியா செய்தி

எரிவாயு விலை உயர்வு – மே 07 இல் தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம்

  • May 3, 2026
  • 0 Comments

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ரயில்வேயில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் குறைக்கப்படுவதை கண்டித்து,  எதிர்வரும் 07 ஆம் திகதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சிபிஐ (எம்.எல்) லிபரேசன் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை கடந்த […]

இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (02) நள்ளிரவு முதல் அனைத்து எரிபொருள் விலைகளையும் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் லங்கா வொயிட் டீசலின் விலை  10 ரூபாய் உயர்த்தப்பட்டு,  392 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் விலை  15 ரூபாவால் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை  458  ரூபாயாகும். ஒரு லிட்டர் ஆக்டேன் 95 பெட்ரோலின் விலை  15 ரூபாயால் உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை  470 […]

இந்தியா செய்தி

சிலிண்டர் விலை அதிகரிப்பு உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதல் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

  • May 2, 2026
  • 0 Comments

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளமை, உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சுமத்தியுள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதியன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எரிபொருள் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டணியின் அடாவடி தாக்குதலால் மேற்காசிய நாடுகளில் […]

இந்தியா செய்தி

சிலிண்டர் விலை அதிகரிப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும் என காங்கிரஸ் எச்சரிக்கை

  • May 1, 2026
  • 0 Comments

வணிக சிலிண்டரைத் தொடர்ந்து அடுத்ததாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா – ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “பணவீக்கத்தின் தாக்கம் தேர்தல்களுக்குப் பின்னரே உணரப்படும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். அதன்படி இன்று, […]

செய்தி தமிழ்நாடு

அதிர்ச்சியில் சென்னை மக்கள் – அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை 

  • May 1, 2026
  • 0 Comments

சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், இன்று நாடு முழுவதும் 19 கிலோ கிராம் நிறையுடைய வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் […]

இலங்கை

இலங்கையில் முட்டை விலையில் ஏற்பட்ட மாற்றம்

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு வெள்ளை முட்டை 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு முட்டை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக முட்டையின் விலை சிறிதளவு அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.