“எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு என்பது தேர்தல் கூட்டணி அல்ல. அடுத்த தேர்தலில் நாம் ஒன்றாகப் போட்டியிடப்போவதும் இல்லை. எனவே, இதில் இணையும் நபர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை” அரசியல் இலங்கை செய்தி

“எதிரணிகளின் ஒன்றிணைவு தேர்தல் கூட்டணி அல்ல”

  • July 28, 2026
  • 0 Comments

“எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு என்பது தேர்தல் கூட்டணி அல்ல. அடுத்த தேர்தலில் நாம் ஒன்றாகப் போட்டியிடப்போவதும் இல்லை. எனவே, இதில் இணையும் நபர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்திற்காகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். இது ஒரு பொது நோக்கமாகும். இந்த விடயத்தில் இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது. இந்த பொது […]

உலகம் செய்தி

இஸ்ரேல் – லெபனான் இடையே அடுத்தகட்டப் பேச்சு ரோமில்

  • July 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 4 ஆம் திகதி ரோமில் நடைபெறும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே கையெழுத்தான கட்டமைப்பு ஒப்பந்தத்தை (framework agreement) முழுமையாகச் செயல்படுத்துவதில் ரோமில் நடைபெறும் தொழில்நுட்பக் குழுக்கள் கவனம் செலுத்தும்” என்று குறித்த அதிகாரி கூறியுள்ளார். “முன்னோடி மண்டலச் செயல்முறையை விரிவாக்குவது, நிலுவையில் உள்ள அனைத்து எல்லைப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பது மற்றும் ஒரு விரிவான […]

ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், பிரான்ஸ் பிரதிநிதிகள் பேசத் தொடங்கியதும், அமெரிக்க தூதுவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். உலகம் செய்தி

பிரான்ஸ் ராஜதந்திரிகள் உரையாற்றுகையில் அமெரிக்க தூதுவர்கள் வெளிநடப்பு

  • July 28, 2026
  • 0 Comments

ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், பிரான்ஸ் பிரதிநிதிகள் பேசத் தொடங்கியதும், அமெரிக்க தூதுவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க்கின் (Volker Turk) நான்கு ஆண்டு கால பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு எதிராக வாஷிங்டன் வாக்களித்தது தொடர்பாக, அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளுக்கிடையே இணையத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்த வெளிநடப்பு நடந்துள்ளது. ஜெனீவாவில் உள்ள பிரான்ஸின் ஐ.நா. தூதரகம் சனிக்கிழமையன்று வெளியிட்ட பதிவில், […]

உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy), செவ்வாய்க்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைச் (Donald Trump) சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யாமீது புதிய தடைகள்: ட்ரம்பை சந்திக்கிறார் உக்ரைன் ஜனாதிபதி

  • July 28, 2026
  • 0 Comments

உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy), செவ்வாய்க்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைச் (Donald Trump) சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாமீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவிக்கவுள்ள நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. மறைந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாமின் (Lindsey Graham) இறுதிச் சடங்கில் பங்கேற்கும் செலென்ஸ்கி, செவ்வாய்க்கிழமை மாலையில் செனட் சபையையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக இரு செனட் உதவியாளர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பல […]

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, 'கூட்டு முகாமைத்துவக் குழு' கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிர்வாக ஒப்பந்தம் குறித்து இணக்கம்

  • July 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, ‘கூட்டு முகாமைத்துவக் குழு’ கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது. இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு கலந்துகொண்டனர். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா […]

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இலங்கை செய்தி

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு

  • July 28, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த ரிட் மனு நேற்று திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர […]

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநில பிரீமியர் (Premier) ஜெசிந்தா ஆலன் (Jacinta Allan) பதவி விலகியுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

விக்டோரியா மாநில பிரீமியர் ராஜினாமா

  • July 28, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநில பிரீமியர் (Premier) ஜெசிந்தா ஆலன் (Jacinta Allan) பதவி விலகியுள்ளார். இது துணை பிரீமியர் பென் கரோல் (Ben Carroll) மாநிலத்தின் அடுத்த தலைவராவதற்கு வழிவகுத்துள்ளது. இன்று காலை, தான் தோல்வியடைக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்புத் தீர்மானத்திற்கு முன்னதாக ஆலன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதேவேளையில், தலைமைப் போட்டிக்கு வருமாறு தொழிலாளர் கட்சியினர் தன்னை அணுகியதாக கரோல் தெரிவித்திருந்தார். டேனியல் ஆண்ட்ரூஸைத் தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு முதல் விக்டோரியாவின் பிரீமியராக […]

செக் குடியரசைச் சேர்ந்த இருவர் , திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் இன்று (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இலங்கை செய்தி

வெளிநாட்டு ஜோடிக்கு சைவநெறி முறைப்படி திருகோணமலையில் திருமணம்

  • July 27, 2026
  • 0 Comments

செக் குடியரசைச் சேர்ந்த இருவர் , திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் இன்று (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். திருகோணமலை சாம்பல்தீவு பாம் பீச் ரிசோட் விடுதியில் வைத்து யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதனின் முன்னிலையில் மைக்கல் என்பவரும், சன்ரா என்பவரும் இன்று (25) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இதன்போது ஒருவரை ஒருவர் இறுதி மூச்சு வரை இன்பத்திலும் துன்பத்திலும் அன்பு செய்து வாழ்வோம் என்று உறுதிகூறி குருவால் வழங்கப்பட்ட உருத்திராக்கம் […]

உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

நீதியரசர்களின் பதவிகாலம் நீடிப்பு: அமைச்சரவை அனுமதி

  • July 27, 2026
  • 0 Comments

உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 107(5) பிரிவின்படி, உயர்நீதிமன்ற நீதியரசரின் தற்போதைய ஓய்வு வயது 65 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய முன்மொழிவின்படி, இது 67 ஆண்டுகளாக நீடிக்கப்படும் என தெரியவருகின்றது. அதே பிரிவின் கீழ், மேல்முறையீட்டு நீதிமன்ற […]

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு

  • July 27, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி, […]