ஐரோப்பா

வாட்ஸ்அப் உரையாடல்கள் – புதிய சர்ச்சையில் சிக்கிய ஸ்டாமர்!!

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் வாட்ஸ்அப்பில் (WhatsApp) தானாகவே மறையும் செய்தி அம்சத்தைப் பயன்படுத்துவதாக டவுனிங் தெரு உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால்  ‘மாண்டல்சனுடனான உரையாடல்களை பெற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப், பயனர்கள் செய்திகளை 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 90 நாட்களுக்குப் பிறகு தானாகவே மறையுமாறு அமைக்க அனுமதிக்கிறது.

இதன் பொருள், பிரதமருக்கும் மாண்டல்சனுக்கும் இடையேயான கடந்தகால உரையாடல்களை இனி மீட்டெடுக்க முடியாது என்பதாகும்.

மாண்டல்சனின் பதவி நியமனம் குறித்து வெளியிடப்பட்ட கோப்புகளில்,   iMessage உரையாடல்களின் ஒரே ஒரு பக்கம் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

அதில், தேர்தலின் போதும் சர் கெய்ர் ஸ்டாமர் பிரதமரான பிறகும் மாண்டல்சன் ஆலோசனைகளை வழங்கியிருந்தமை மட்டுமே இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்