ஈரானின் மிகப்பெரிய பாதாள களஞ்சியசாலையை தகர்ப்போம்: ட்ரம்ப் சூளுரை
ஈரான்மீது வாஷிங்டன் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தும் என எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘பிக்ஆக்ஸ் மவுண்டன்’ (Pickaxe Mountain) பகுதியை அமெரிக்கா தகர்க்கும் என்றும் கூறினார்.
” பிக்ஆக்ஸ் மவுண்டனைத் நாம் தகர்க்கப் போகிறோம். ஈரானியர்களைத் தயாராக இருக்கச் சொல்லுங்கள்,” என்று Hugh Hewitt Show அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார்.
” பிக்ஆக்ஸ் மவுண்டனை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அங்கே எந்தச் செயல்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் தங்களது அணுசக்தி விவகாரத்தில் நல்ல நிலையில் இல்லை.
அதைப் பற்றி நாம் கேள்விப்படும் போதெல்லாம், அதை வெடிவைத்துத் தகர்க்கிறோம். எனவே அவர்கள் அதைப் பற்றிப் பேச விரும்புவதில்லை. ஆனால் நாம் மிக விரைவில் பிக்ஆக்ஸ் மீது தாக்குதல் நடத்தக்கூடும்,” என்று டிரம்ப் கூறினார்.
ஈரானின் பலத்த சேதமடைந்த நடன்ஸ் (Natanz) யுரேனியம் செறிவூட்டல் ஆலைக்கு அருகில் அமைந்துள்ள பிக்ஆக்ஸ் மவுண்டன், பலத்த பாதுகாப்பு அரண்களைக் கொண்ட ஒரு தளமாகும்.
இது பூமியின் ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ள இரண்டு சுரங்க வளாகங்களைக் கொண்டுள்ளது. இவை அமெரிக்க ஆயுதக் கிடங்கில் உள்ள மிக சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ (bunker buster) குண்டுகளின் வரம்பிற்கும் அப்பாற்பட்டவை என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.




