பாரசீக வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்: ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்கா முடிவு
பாரசீக வளைகுடா மற்றும் அதற்கு அப்பாலுள்ள ஈரானியக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை (Naval Blockade) அமெரிக்கா மீண்டும் அமுல்படுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகங்களிடம் பேசிய டிரம்ப்,
உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கு மிக முக்கிய ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடும் என்றும், அதைக் கண்காணிப்பதற்கான கட்டணத்தை ஏனைய நாடுகள் அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகப் பக்கத்தில் இந்த முற்றுகை அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதை அடுத்து, பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதுடன், ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாகவும் அறிவித்தது.
இந்த நிலையிலேயே டிரம்ப் தனது புதிய மூலோபாயத்தை அறிவித்துள்ளார்.




