பிலிப்பைன்ஸில் இரு விமானங்கள் மோதி விபத்து – 04 விமானிகள் பலி
பிலிப்பைன்ஸில் விமானப்படை பயிற்சியின்போது நேர்ந்த விபத்தில் நான்கு விமானப்படை விமானிகள் உயிரிழந்துள்ளனர். பயிற்சியில் பங்கேற்ற இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகுிறது. பிலிப்பைன்ஸ் விமானப்படைத் தளம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமானப்படை பயிற்சித் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.



