நிரந்தர அமைதி ஒப்பந்தம் – ஈரானுக்கு ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள 60 நாட்கள் அவகாசம் உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதற்கு இணங்கத் தவறினால், “அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்காத” நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஈரானுடனான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை பெஞ்சமின் நெதன்யாகு சீர்குலைக்க முயற்சிக்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.




