உலகம் செய்தி

கடுமையான இஸ்ரேலிய கட்டுப்பாடுகளையும் மீறி அல்-அக்ஸாவில் 60,000 பலஸ்தீனியர்கள் தொழுகை

  • May 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்தபோதிலும், சுமார் 60,000 பலஸ்தீனியர்கள் வெள்ளிக்கிழமை அல்-அக்ஸா மசூதியில் தொழுகையில் கலந்துகொண்டனர். ஜெருசலேமின் பழைய நகரம் மற்றும் மசூதி வளாக நுழைவாயில்களில் இஸ்ரேலியப் படைகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியிருந்ததாக இஸ்லாமிய வக்ஃப் துறை தெரிவித்துள்ளது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் மசூதி முற்றங்களுக்கு வரத் தொடங்கினர். பழைய நகரம் முழுவதும் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டதுடன், மசூதி வாயில்கள் மற்றும் ஜெருசலேம் சுற்றியுள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது. வழிபாட்டாளர்களின் அடையாள அட்டைகள் […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்திலும் லெபனானில் 15 குழந்தைகள் உயிரிழப்பு – யுனிசெஃப் அதிர்ச்சி

  • May 29, 2026
  • 0 Comments

லெபனானில் கடந்த ஒரு வாரத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்ததுடன், 62 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், தெற்கு லெபனானில் நடந்த வான்வழித் தாக்குதல்களே இந்த பாதிப்புகளுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஜெனீவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ரிக்கார்டோ பிரஸ் இதுகுறித்து தகவல் வெளியிட்டார். “கடந்த ஏழு நாட்களில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் […]

உலகம் செய்தி

தாக்குதல்கள் தீவிரம் – மேலும் லெபனான் மக்களை வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல்

  • May 29, 2026
  • 0 Comments

லெபனானில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தெற்கு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அன்சாரியா, அல்-க்ராயெப், ஷப்ரிஹா, சரஃபந்த், அட்லூன் மற்றும் பைசாரியா பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக “ஸஹ்ரானி நதிக்கு வடக்கே செல்ல வேண்டும்” என்று இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. அதனால் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இராணுவம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” என்று இஸ்ரேல் தரப்பு அறிக்கையில் […]

உலகம் செய்தி

ஹெப்ரோனில் இப்ராஹிமி மசூதி மூடல் – இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன் கண்டனம்

  • May 29, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் நகரில் அமைந்துள்ள இப்ராஹிமி மசூதியை இஸ்ரேலியப் படைகள் “மறு அறிவிப்பு வரும் வரை” மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மசூதியில் தொழுகை செய்தவர்களையும், காவலர்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாக பொறுப்பாளர்களையும் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய வீரர்கள் உத்தரவிட்டதாக மசூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் மசூதிக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அதைச் சுற்றியுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும் மற்றும் நுழைவாயில்களும் மூடப்பட்டன. இந்த நடவடிக்கை குறித்து பலஸ்தீனத்தின் வக்ஃப் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சகம் […]

உலகம் செய்தி

போர்நிறுத்த மீறல் – காசா தாக்குதல்களுக்கு பலஸ்தீன் கடும் கண்டனம்

  • May 29, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களை பலஸ்தீன அதிகாரிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். இத்தாக்குதல்கள் “அழித்தொழிப்பு, படுகொலை மற்றும் நாசவேலைப் போர்” என அவர்கள் விவரித்துள்ளனர். மேலும், இது சர்வதேச சட்டங்களையும், போர்நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வுகளையும் வெளிப்படையாக மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்த நாடுகள் மற்றும் உத்தரவாத நாடுகள், ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுத்து, பலஸ்தீன மக்களுக்கு எதிரான […]

உலகம் செய்தி

மீண்டும் போர் தொடுக்க வேண்டாம்- அமெரிக்கா, ஈரானுக்கு ரஷ்யா அழைப்பு

  • May 28, 2026
  • 0 Comments

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ மோதலுக்குள் செல்லாமல், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்ற உதவ ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா  தெரிவித்தார். ஆனால், இதுதொடர்பாக மாஸ்கோ தனது யோசனைகளை யார்மீதும் திணிக்கவில்லை என்றும் அவர்  கூறினார். மறுபுறம், ஈரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 100 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவு

  • May 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும், லெபனானின் தெற்கு பகுதிகளில் பதற்றம் தொடர்கிறது. ஏப்ரல் 16 அன்று, இஸ்ரேல் தனது தரைப்படைகள் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 600 சதுர கிலோமீட்டர் பரப்பை “இடைநிலை பாதுகாப்பு மண்டலம்” என அறிவித்து, அந்த பகுதிக்குள் உள்ள 57 நகரங்கள் மற்றும் கிராமங்களை மக்கள் காலி செய்யுமாறு எச்சரித்தது. இதற்குப் பிறகு, அந்த ஆக்கிரமிப்பு மண்டலத்திற்கு வெளியேயும் இஸ்ரேல் இராணுவம் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி […]

உலகம் செய்தி

போர்சேதத்திற்குப் பிறகு தப்ரிஸ் விமான நிலையம் மீண்டும் திறப்பு

  • May 27, 2026
  • 0 Comments

வடமேற்கு ஈரானில் அமைந்துள்ள தப்ரிஸ் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக ஈரான் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. சமீபத்திய போரின்போது தாக்குதலுக்குள்ளான இந்த விமான நிலையம், ஈரானிய நிபுணர்களின் புனரமைப்பு பணிகளுக்குப் பிறகு புதன்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதல்களால் பாதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து சேவைகள் தற்போது படிப்படியாக மீளத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மீண்டும் […]

உலகம் செய்தி

லெபனான் தாக்குதல் தொடர்ந்தால் அமீரகம் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தலாம் – ஆய்வாளர் எச்சரிக்கை

  • May 26, 2026
  • 0 Comments

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக ஈரான் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடும் என தெஹ்ரான் பல்கலைக்கழக ஆய்வாளர் முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார். அல் ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, “தற்போது இரண்டு முக்கிய பதற்ற நிலைகள் உருவாகியுள்ளன. ஒன்று ஹோர்முஸ் நீரிணை பகுதியில், மற்றொன்று லெபனானில். ஈரானும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருவதற்கு முன், அந்த உடன்பாட்டிலிருந்து லெபனான் விவகாரத்தை தனியே பிரிக்க இஸ்ரேல் பிரதமர் […]

உலகம் செய்தி

உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கடும் சரிவு

  • May 25, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்க இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாகக் குறைந்துள்ளன. திங்கட்கிழமைக்குள் போர் நிறத்த ஒப்பந்தம் எட்டப்படலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio தெரிவித்திருந்தார். இதனையடுத்து, உலகளாவிய எண்ணெய் அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 5.5% வீழ்ச்சியடைந்து பீப்பாயொன்றுக்கு சுமார் $97.90 டொலராக குறைந்துள்ளது. பிற்பகலில் சுமார் $97.70 அளவில் பதிவானது அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பும் பேச்சுவார்த்தைகளில் […]