தைவானில் இராணுவ விமானம் விபத்து : இருவர் பலி!
இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த தைவானிய விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டின் தெற்குத் துறைமுக நகரமான காவோசியுங்கில் (Kaohsiung)உள்ள காங்ஷான் (Gangshan) விமானப்படைத் தளத்தின் ஓடுபாதையில் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெப்டினன்ட்-கர்னல்கள் லூ மற்றும் குவோ என அடையாளம் காணப்பட்ட இரு விமானிகளே மேற்படி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை விசாரிக்க விமானப்படை ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது.




