இத்தாலி நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு விபத்து – 13 பேர் மாயம்
இத்தாலியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புலம்பெயர்ந்தோர் படகு ஒன்று துனிசியக் கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குறைந்தத 13 துனியர்கள் காணாமல்போயுள்ளதுடன், இருவர் மட்டுமே மீட்கப்பட்டதாக புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். குறித்த துயரச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. வியாழக்கிழமை அதிகாலையில் அந்தப் படகு புறப்பட்டது என்று துனிசிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் முஸ்தபா அப்தெல்கெபிர் Mostafa Abdelkebir குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் உயிர் பிழைத்தவர்களில் இரண்டாவது நபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]



