மண்டேல்சன் விவகாரத்தில் அதிக நேரம் வீணாகிறது – அமைச்சர் எம்மா ரெனால்ட்ஸ்
மண்டேல்சன் (Mandelson) தொடர்பான சர்ச்சை குறித்து அதிக நேரம் செலவிடப்படுவதாக அமைச்சரவை அமைச்சர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds) தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலையில், மண்டேல்சனின் விவகாரத்திலேயே கவனம் செலுத்தப்படுவது ஏமாற்றமளிப்பதாக கூறினார். மேலும், மண்டேல்சனின் (Mandelson) தகுதி சரிபார்ப்பு தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தவில்லை என்பது கடந்த வாரமே தெளிவாக நிரூபிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். […]







