பொழுதுபோக்கு

ஜனநாயகனை ஒளிபரப்ப தடை விதிப்பு!

  • April 17, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை இணையதளங்கள் மற்றும் கேபிள் ‘டிவி’க்களில் ஒளிபரப்ப சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச்சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் அப்படம் திரையரங்குகளில் இன்னும் வெளியாகவில்லை. எனினும், சில நாட்களுக்கு முன்பு இணையதளங்களில் படம் சட்டவிரோதமாக வெளியானது. இந்நிலையில், இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் இந்த படத்தை ஒளிபரப்ப தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்தது. நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி […]

ஆஸ்திரேலியா

போர்க்குற்றச்சாட்டில் கைதான ஆஸ்திரேலிய முன்னாள் படை அதிகாரிக்கு பிணை!

  • April 17, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி Roberts-Smith பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சாட்சிகளை சந்தேகநபர் திசை திருப்பக்கூடும் என்ற அரசுத் தரப்பின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, சிட்னி நீதிமன்றம் அவருக்கு சில கடுமையான நிபந்தனைகளுடன் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் இருந்தபோது அவர் போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணைகளின் பின்னரே அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது சிவில் நீதிமன்றத்தில் […]

விளையாட்டு

தொடர்கிறது வெற்றிநடை: முதலிடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்!

  • April 17, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரின் நேற்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் Punjab Kings அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தத் தோல்வியின் மூலம் Mumbai Indians அணி தனது 4-வது தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை. மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 […]

உலகம் செய்தி

இஸ்ரேல் மக்கள் அதிருப்தி!லெபனானில் கொண்டாட்டம்!!

  • April 17, 2026
  • 0 Comments

லெபனான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் திடீரென ஏற்றுக்கொண்டது அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம் அமுலுக்கு வருவதற்குச் சற்று முன்பாகக்கூட, வடக்கு இஸ்ரேலிய நகரங்களை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டதால் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் அரசாங்கத்தின் இந்த முடிவை அந்நாட்டு மக்கள் சந்தேகத்துடனும் ஏமாற்றத்துடனும் பார்க்கிறார்கள். இந்த உடன்படிக்கை தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு எதிரானது என்றும், இது எல்லையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைத் தராது என்றும் அவர்கள் […]

இலங்கை

கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை

  • April 17, 2026
  • 0 Comments

வீதிகளில் அதிகப்படியான கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிய மோட்டார் வாகனப் பரிசோதகர்களுடன் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்போது வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், தேவைப்படும் பட்சத்தில் அவ்வாறான வாகனங்களைக் பொலிஸார் பொறுப்பேற்பார்கள் என்றும் டபிள்யூ. பி. […]

உலகம் செய்தி

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் நம்பிக்கை!

  • April 17, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் மிக விரைவில் முடிவுக்குவரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் Donald Trump மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் மீண்டும் அமைதி பேச்சை தொடங்கி வைப்பதற்கு பாகிஸ்தான் தீவிரம் காட்டிவருகின்றது. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன. எனவே, புதிய […]

இலங்கை

21 மாவட்டங்களில் உச்சம் தொடும் வெப்பம்!

  • April 17, 2026
  • 0 Comments

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ( 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவுறுத்தலின்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திலும் இந்த வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பச் சுட்டெண் (Heat Index) அதிகரிப்பதன் காரணமாக, நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு அதிக உடல் […]

உலகம் செய்தி

ட்ரம்புக்கு ‘ஐஸ்’ வைத்த லெபனான் ஜனாதிபதி!

  • April 16, 2026
  • 0 Comments

லெபனானில் நிலவும் பதற்றத்தைத் தணித்து போர்நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு லெபனான் ஜனாதிபதி Joseph Aoun நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இவ்வாறு நன்றி கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, லெபனானில் நிலையான அமைதியை நிலைநாட்ட விரும்புவதாக இதன்போது ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த லெபனான் ஜனாதிபதி, இதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார். பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் […]

இந்தியா

தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு!

  • April 16, 2026
  • 0 Comments

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைமூலம் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 இல் இருந்து 59 ஆக அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். தொகுதி மறுவரையறை சட்டமூலம் 2026-ஐ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் முன்வைத்தார். இச்சட்டமூலத்துக்கு தமிழக அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. தமிழக கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் மேற்படி சட்டமூலம்மீதான விவாதத்தில் உரையாற்றிய அமித் ஷா, “ஐந்து தென்மாநிலங்களில் தற்போது 129 மக்களவைத் […]

இலங்கை செய்தி

அன்னை பூபதிக்கு தமிழர் தலைநகரில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!

  • April 16, 2026
  • 0 Comments

அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16) காலை திருகோணமலை சிவன் கோவிலடியை சென்றடைந்தது. இதன்போது பொதுமக்கள் அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, தீபச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருகோணமலையின் முக்கிய பகுதிகளிலும் அவருடைய உருவப்படத்திற்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து […]